உலக நிலவரம் எல்லாம் ஒரே கலவரமா இருக்கு.இதுல டெய்லி ஒவ்வொருத்தனும் ஒரு குண்டை தூக்கி போட்டு சாவடிக்குறானுங்க..ஏற்கனவே போர்ட்போலியோ பாதிக்கு மேல டவுசர் கழண்டு போய் கிடக்குது.மீதி இருக்கும் காசாவது கிடைக்குமா?இல்ல அதுவும் புட்டுக்குமா? இப்படி பல எண்ணங்கள் இன்று முதலீட்டாளர்களின் மனதில் ஓடிகிட்டு இருக்கும்ங்க..(ஆமாங்க..ஆமாங்க..அதேதாங்க.. இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கனு நீங்க சொல்றது இங்க எனக்கு கேட்ருச்சு)
சரி, பங்குச் சந்தையின் ரோலர் கோஸ்டரில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்கும் இந்த சுவாரஸ்யமான உத்தியைப் பற்றி ஒரு சின்ன சுற்றுலா போகலாம். கவலைப்படாதீங்க, நான் உங்களை குழப்பமான சொற்களாலோ அல்லது சலிப்பான புள்ளிவிவரங்களாலோ தாக்க மாட்டேன்.
நம்ம பயணம் கொஞ்சம் சிரிப்பும் சிந்தனையும் நிறைந்ததா இருக்கும்!
இந்த மாதிரி பியர் மார்க்கெட்ல (கரடி சந்தைங்க..நீங்க நினைக்கும் பியர் இல்லை)போர்ட்போலியோ மதிப்பு மேலும் புட்டுக்காம இருக்கனும்னா நாம செய்ய வேண்டியது புட் ஆப்சன் பக்கம் கொஞ்சம் கவனம் வைக்கனும்.அதை பற்றிதான் இதுல பேச போறேன்.(Tamil stock talk னு பேர் வெச்சுட்டு பேசலைன்னா எப்படி?)
ஆப்சன் ஹெட்ஜிங்: பங்குச் சந்தையின் காப்பீடு .உங்கள் போர்ட்ஃபோலியோவை ஒரு புத்தம்புதிய பைக்காக கற்பனை செய்யுங்கள். நீங்கள் அதை பளபளப்பாக வைத்திருக்கிறீர்கள், ஆனால் திடீரென மழை பெய்யுது—அதாவது, பங்கு விலைகள் சரியுது. இப்போ என்ன செய்வீங்க? பைக்கை மழையிலேயே விட்டுட்டு ஓடுவீங்களா? இல்லை, ஒரு தார்பாய் (tarpaulin) எடுத்து மூடுவீங்களா? ஆப்சன் ஹெட்ஜிங் என்பது உங்கள் பங்குகளுக்கு அந்த தார்பாய் மாதிரி.அது உங்களை இழப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு புத்திசாலித்தனமான உத்தி.
புரிஞ்சுக்க ஒரு சின்ன உதாரணம்
நீங்க 100 மன்னார்&கம்பேனி லிமிடெட்" பங்குகளை வாங்கியிருக்கீங்க, ஒரு பங்கு விலை ₹500. ஆனால் சந்தை திடீர்னு தடுமாறி, விலை ₹450-க்கு இறங்கிடுச்சு. ஒரு பங்குக்கு ₹50 இழப்பு, மொத்தம் ₹5000 பறி போச்சு!
இப்போ நீங்க ஒரு புது ஐஃபோன் வாங்குற கனவு கூட சுக்கு நூறா போயிடும். ஆனால் ஆப்சன் ஹெட்ஜிங் பண்ணியிருந்தா, இந்த இழப்பை நீங்க கூலா தவிர்த்திருக்கலாம்.
ஆப்சன் ஹெட்ஜிங்-னு என்னது?
ஆப்சன்ஸ் (Options) என்பது ஒரு வகையான ஒப்பந்தம். இது உங்களுக்கு ஒரு பங்கை ஒரு குறிப்பிட்ட விலையில் (Strike Price) வாங்கவோ அல்லது விற்கவோ உரிமை கொடுக்குது, ஆனால் கட்டாயம் இல்லை. இதுல ரெண்டு வகை இருக்கு:
கால் ஆப்சன் (Call Option): பங்கு விலை ஏறும் போது லாபம் தரும்.
புட் ஆப்சன் (Put Option): பங்கு விலை இறங்கும் போது லாபம் தரும்.
நம்ம பிரச்சனை பங்கு விலை இறங்குறது, அதனால நம்ம போர்ட்போலியோ புட்டுக்காம இருக்கனும்னா இங்க "புட் ஆப்சன்" தான் நம்ம ஹீரோ.
ஹெட்ஜிங் எப்படி வேலை செய்யுது?
மேல சொன்ன "மன்னார்&கம்பேனி லிமிடெட்" பங்கு எடுத்துக்குவோம். நீங்க 100 பங்குகளுக்கு ₹500-ல் ஒரு புட் ஆப்சன் வாங்குறீங்க. ஒரு புட் ஆப்சனுக்கு ப்ரீமியம் (கட்டணம்) ₹10-னு வச்சுக்குவோம். மொத்தம் ₹1000 செலவு. இப்போ பங்கு விலை ₹450-க்கு இறங்கிடுச்சு. உங்களுக்கு இப்போ இந்த பங்கை ₹500-க்கு விற்க உரிமை இருக்கு (புட் ஆப்சன் மூலமா)
அதாகப்பட்டது
சந்தையில உங்ககிட்ட இருக்கும் பங்கின் விலை: ₹500
இப்போ அந்த பங்கு விலை இறங்குது.தொடர்ந்து இறங்கும்னு தோணுச்சுனா ,இப்ப நீங்க செய்ய வேண்டியது அந்த "மன்னார்&கம்பேனி" பங்கு ஆப்சன் மார்க்கெட்ல இருக்கான்னு பார்க்கனும்.அப்படி இருந்துச்சுனா உங்ககிட்ட இருக்கும் ம&க லிமிட்டட் பங்கின் ஆப்சன் மார்க்கெட்ல ₹500 strike விலையில் உள்ள புட் ஆப்சனை வாங்கிகனும்.
இப்போ உங்க போர்ட்போலியோவில் இருக்கும் ம.க லிமிட்டட் பங்கு எவ்ளோ இறங்குதோ அந்த அளவுக்கு நீங்க வாங்குன புட் ஆப்சன் பிரீமியம் ஏற ஆரம்பிக்கும்.ஒரு பக்கம் நம்ம பங்கு விலை இறங்கி நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் புட் ஆப்சன் மூலம் லாபம் வரும். ஓரளவு நஷ்டத்தை மேனேஜ் பண்ணிக்கலாம்.
உதாரணமா,
நம்ம போட்ர்போலியோவில் உள்ள பங்கில் ₹2000 நட்டத்தில் இருந்தால் அதே பங்கின் புட் ஆப்சனில் மார்க்கெட் இறக்கத்திற்கு ஏற்ற மாதிரி ₹5000 கூட லாபத்தில் இருக்கும்.
நட்டம் 2000 கழிச்சாலும், உங்களுக்கு ₹3000 லாபம்! இல்லாட்டி, உங்க போர்ட்ஃபோலியோவுல இழப்பு மட்டும்தான் ஆகியிருக்கும். இப்போ சொல்லுங்க, இது சூப்பரா இல்லையா?
இந்த ஆப்சன் ஹெட்ஜிங்-ஐ ஒரு திருமண காப்பீடு மாதிரி நினைங்க. உங்களுக்கு திருமணமே ஆகியிருக்கோ இல்லையோ, ஆனால் எதிர்காலத்துல "என்ன நடக்குமோ"னு பயந்து ஒரு பிளான் வச்சிருப்பீங்க. அதே மாதிரிதான் இதுவும்.
பங்கு விலை இறங்கினா, "புட் ஆப்சன்" உங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.
எப்போ ஹெட்ஜிங் பண்ணணும்?
சந்தை சரிவு சிக்னல்ஸ்: பொருளாதார செய்திகள்ல "ரெசஷன்" அல்லது "கரடி சந்தை"னு பேச ஆரம்பிச்சா.
நிறுவன பிரச்சனைகள்: உங்க பங்கு நிறுவனத்துக்கு ஏதாவது ஊழல் அல்லது நஷ்ட செய்தி வந்தா.
உங்க பயம்: சில சமயம் உள்ளுணர்வு சொல்லும் "ஏதோ தப்பு நடக்குது"னு. அப்போ ஹெட்ஜிங் ஒரு பாதுகாப்பு கவசம்.
கவனிக்க வேண்டியவை
ப்ரீமியம் செலவு: இது ஒரு சின்ன ரிஸ்க். பங்கு விலை இறங்கலைனா, இந்த பணம் வீண் ஆகலாம்.
டைமிங்: ஆப்சன்ஸுக்கு ஒரு காலாவதி தேதி (Expiry Date) இருக்கும். அதுக்குள்ள பயன்படுத்தலைனா,ஆப்சனுக்கு கட்டுன மொத்த பிரீமியமும் "காலி"ஆகிடும்.அதையும் பார்த்து சூதானமா இருக்கனும்பே..
அளவு: உங்க போர்ட்ஃபோலியோவுக்கு ஏத்த மாதிரி ஆப்சன்ஸ் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கணும்.
ஹெட்ஜிங் = ஸ்மார்ட் மூவ்
பங்குச் சந்தை ஒரு பெரிய விளையாட்டு மைதானம் மாதிரி. நீங்க ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால் புத்திசாலிதனமா ஆப்சன் ஹெட்ஜிங் மூலமா, நீங்க உங்க இழப்பை குறைச்சு, "நானும் கெத்துதாண்டா" னு நிரூபிக்கலாம். அடுத்த முறை பங்கு விலை இறங்கினா, "ஓஹோ, என் புட் ஆப்சன் ரெடி!"னு சொல்லி ஒரு டீ குடிச்சுக்கிட்டே ரிலாக்ஸ் பண்ணுங்க.
இன்னொரு முக்கியமான விசயம் ஜி..
இந்த பதிவின் நோக்கம்,மார்க்கெட் கரெக்சன்ல இருக்கும்போது நம்ம போர்ட்போலியோ வை எப்படி அதிக இழப்பில்லாமல் பாதுகாக்கலாம் அப்பங்கற நோக்கம்தானே தவிர,உங்களை ஆப்சன் வணிகம் செய்ய சொல்வது அல்ல.இந்த ஹெட்ஜிங் பற்றி நல்லா தெரிஞ்சு அதுல உள்ள ரிஸ்க் எல்லாம் புரிஞ்சு அப்புறமா ட்ரை பண்ணுங்க.ஏனோ தானோன்னு எதையாவது எடுத்து வெச்சுட்டு மேற்கொண்டு தேரை இழுத்து தெருவில் விட்றாதீங்க ஜி..
மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம் மக்களே..நன்றி!!
மறக்காம நம்ம Blog ஐ Follow பண்ணிடுஙக ஜி
No comments:
Post a Comment